கால வெளி கடந்து
கால வெளிகளைக் கடந்து நடந்தொரு
கவித்துவம் கொண்டு வந்தேன்
மூல மூளையின் முடுக்கில், இடுக்கிலும்
முந்துவ கொண்டு வந்தேன்.
ஆழ நெடுங்கடல் நீள அகலங்கள்
அளந்து கலந்து வந்தேன்.
தாள கர்ப்பத்தில் உறங்கும் கவித்துவத்
தரிசனம் காட்ட வந்தேன்.
நீள வாழ்விலே போல வாழ்வதா
நினைக்கவும் கூசு கின்றேன்
கூளம் குப்பைபோல் குறைந்து போவதா?
கொடுமை வேறு முண்டா?
நாளம் நரம்பிலும் ஞானம் ததும்பிட
நானும் பிறந்து வந்தேன்!
காலம் வாழ்கிற காலம் வரையிலே
கவியில் வாழ்ந்திருப்பேன்!