நாசகார மீத்தேன்

பூகம்பங்கள்
அதிர்வுகள்
பூதாகாரம் விரைவில்.....!
தனியார்
நிறுவனம்
என்ற பெயரில்
மனித வர்கத்தின்
துரோகிகள் இயற்க்கை
கொள்ளையர்கள்.....!
விவசாயம்
அழிக்க - சாயம்
பூச வருகிறது
மீத்தேன் என்ற
அரக்கன் கிராம
புறங்களில் ....!
ஏமாறும்
விவசாயிகள்
விரைவில் சொந்த
மண்ணில் அகதிகள்...!
இந்திய
திருநாட்டை
அழிக்க
வந்த சட்டம்
மீத்தேன்
செயல் திட்டம்.......!
காவேரியை
வற்ற விட்டு
கயவர்கள் கொள்ளை
அடிக்க சதி
வேளாண்மை
எதிர்க்கும் திட்டம்........!
எல்லாம்
திட்டமிட்டு
மத்திய
நிறுவனங்கள்
செயலாற்றுகிறது
தமிழகத்தை
சுடுகாடுகளாக
மாற்றுவதற்கு.....!
ஒன்றுபடுவோம்
இயற்கையின் எதிரி
அரக்கனை தமிழத்தை
விட்டு விரட்டுவோம்........!