எனக்கு நானே ஆறுதல்

பறக்க கற்றுக் கொண்டேன்
தொட்டிலில் இட்டு ஆட்டி
தூங்கும் சமயம் பார்த்து
தூக்கி எறிந்தவர்களுக்கு நன்றி!

மறக்க கற்று கொண்டேன்
உலகமே இவர்கள் தான் என்று
உளரிக் கொண்டிருந்த என்னை
உதாசினப் படுத்தியவர்களுக்கு நன்றி!

சிரிக்கக் கற்றுக் கொண்டேன் வெளியே கூற இயலா
துக்கங்களையும் துயரங்களையும்
வழங்கி சென்றவர்களுக்கு நன்றி!

அழக் கற்றுக் கொண்டேன்
ஆறுதல் வார்த்தகைகள் தேடி
அலைந்து கொண்டிருந்த என்னை
அலட்சிய படுத்தியவர்களுக்கு நன்றி!

நடக்க கற்றுக் கொண்டேன்
நாத்தியற்ற நிலைமையிலும் கூட நடு தெருவில் அநாதை போல
நிறுத்தி சென்றவர்களுக்கு நன்றி!

நீந்த கற்று கொண்டேன்
நீச்சல் தெரியா சிறுப்பிள்ளையை
மூச்சு திணற மூழ்கடித்துவிட்டு
மதியற்று போனவர்களுக்கு நன்றி!

நிற்க கற்று கொண்டேன்
சார்ந்து சாய்ந்து நின்ற தூணை
சட்டென சாய்த்து சரித்து விட்டு
பிடுங்கி எறிந்தவர்களுக்கு நன்றி!

விலக கற்று கொண்டேன்
உயிர் என எண்ணி அளவுக்கு அதிகமாய்
செலுத்தும் அன்பு உபத்திரமென
உணர்த்தி காட்டியவர்களுக்கு நன்றி!

ஏற்க கற்று கொண்டேன்
தலைகீழாய் நின்று தவமிருப்பினும்
மாற்றி கொள்ள மாட்டேனென
முரண்டு பிடித்தவர்களுக்கு நன்றி!

நடிக்க கற்று கொண்டேன்
நாவினில் தேன் சொட்ட நயவஞ்சகம்மாய்
பேசி கூழை கும்பிடு இட்டு
காரியம் சாதித்தவர்களுக்கு நன்றி!

ஏமாற்றியவர்களுக்கு நன்றி!
ஏமாற்றுபவர்களுக்கு
நன்றி!
ஏமாற்ற இருப்பவர்களுக்கும் நன்றி!

நீங்கள் மட்டும் இல்லையேல் ,
என்னுள் ஒளிந்துள்ள அழகினை
என்னுள் புதைந்துள்ள திறமையினை
என்னுள் தணியாத்திருக்கும் கோபத்தை
என்னுடன் பிறந்த மன வலிமையை
நான் அறிந்திருக்க மாட்டேன்!

எந்த நிலையிலும் ,
எனக்கு நானே துணை.
எந்த சூழலிலும் எனக்கு நானே ஆயுதம் .
எந்த துயரத்திலும்,
எனக்கு நானே ஆறுதல்,
என்று
என்னை எனக்கே
எடுத்து காட்டியவர்களுக்கு நன்றி!!!

எழுதியவர் : ரம்யா நம்பி (22-Jun-17, 8:49 pm)
சேர்த்தது : ரம்யா நம்பி
பார்வை : 1303

மேலே