இன்றைய பெண்
ஆண் சிங்கம் நான் என்ற
ஆணவம் கொண்டு நீ
ஆணாட்டம் செய்த காலம்
எல்லாம் போயே போச்சு
நடக்கும் அழகு பொம்மை
இவள் உன் காம இச்சைக்கெல்லாம்
அடிமைப்போல் இசைவு தந்த
காலமெல்லாம் போயே போச்சு
பிள்ளைகளை சுமக்கும்
இயந்திரம் இவள் என்று
நீ நினைத்த காலமெல்லாம்
போயே போச்சு
இன்றைய பெண்
நேற்றைய பெண் போல்
சிறகழிந்து சிறையில் அடைப்பட்ட
கிளியல்லள் சுதந்திரமாய்
திரிந்து வந்திடும் இச்சைக்கிளி
வெறும் அழகு பொம்மை இவள்
என்று என்னிடம் வேண்டாம்
இவள் ருத்திரம் கொண்ட இயந்திரையாய்
மாறிவிடக்கூடும் மாறி எதிரியை
காளியாய் அழித்திவிடக்கூடும்
பாரதி கண்ட கனவை
நினைவாக்கிவிடுவாள் இன்றைய பெண்
,
ஆணுக்கு சமம் என்று தன்னை
சீர்தூக்கி பார்க்கிறாள் இன்றைய பெண்
ஆனாலும் ஒரு போதும் தானாக
'ஆணாட்டம்; போடமாட்டாள் இவள்
பெண்ணாய், மென்மையாய் ஒரு
தாயாய் இருக்க தான் இவள்
விரும்புவாள் சுதந்திர பெண்ணாய்
இருக்கும்போதும்