அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தமிழ்மொழியின் முகவரி நம் தமிழெழுத்தா ? கிரந்தெழுத்தா ?

தலைப்பு :- தமிழ்மொழியின் முகவரி நம் தமிழெழுத்து தான் .

கவிதை வகை :- மரபு

பாவகை :- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

செம்மொழிக்கு முகவரியைத் தாரீர்
------- செப்பேடும் கல்லெழுத்தும் காணீர் .
எம்மொழிக்கும் மூத்தவளாம் ஈங்கே .
-------- எடுத்தியம்பும் இடமன்றோ இஃதே .
நம்மொழியைக் காத்திடலே வேண்டும் .
------- நரகத்தில் தள்ளுதலே வேண்டா .
வம்புகளும் சூழ்ந்திடாது நம்மை .
-------- வகையான பைந்தமிழே உண்மை !!!


தொல்காப்பி யத்தின்கீழ் நிற்போம்
------ தொலைந்திடாது மொழிதனையும் காப்போம் .
சொல்வளங்கள் நிறைந்ததுவே பாரீர் .
------- சொர்க்கமுமே வந்துசேரும் வாரீர் .
வில்தொடுத்தக் காவியத்தைக் கம்பன்
-------- விதந்தோதி வைத்திட்டான் கற்போம் .
வல்லமைதான் உள்ளதடா நன்றாய் .
-------- வளமான தமிழொன்றே கேட்பாய் !!!


பைந்தமிழில் கீதங்கள் பாடு
------- பைம்பொழிலில் நின்றாங்கே ஆடு .
செந்தமிழில் இயற்றிட்ட நூல்கள்
------ செப்பிடுமே முதுமொழியாம் என்றே .
எந்நாளும் மாசற்ற சோலை .
-------- எம்மருங்கும் தமிழ்மொழியே மாலை .
இந்நாளில் உரைத்திட்டேன் முன்னே .
-------- இன்பங்கள் சேர்ந்திடுமே பின்னே !!!


பாவாக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரசுவதி பாசுகரன் .
முகவரி :- 50 , சேதுராமன் பிள்ளை காலனி , டிவிஎஸ் . டோல்கேட் , திருச்சி - 20 , 620020 .
தொடர்புக்கு :- 9443206012

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (23-Jun-17, 9:55 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 78

மேலே