சத்தமிட வாய்ப்பிருக்கிறது
நான்
************
தூரத்தில் இருந்தே கொலுசு
அவிழ்க்க சொல்லி ஜாடை செய்தேன்
நேற்றெழுப்பிய சத்தம் புரிந்து
புன்னகைத்தபடியே
சரி என்று தலையாட்டினாய்
வீட்டுக்குள் சொந்த பந்தங்கள்
அங்கும் இங்கும் அலைந்தபடியே
இருக்க எல்லாம் தாண்டி
அப்டி இப்டி என்று
அறை பக்கம் நெருங்கிய போது
மெட்டியைப்பார்த்தேன்
சத்தமிட வாய்ப்பிருக்கிறது
புரிந்து கொண்டு
எதற்கோ குனிவது போல
கழற்றி விட்டாய்...
அறை நுழைந்த அடுத்த நொடி
நீயாகவே தாலியை கழற்றி
மேசை மீது வைத்தாய்
திக்கென்றது
இருந்தும் சரி என்று தான் பட்டது ....
கவிஜி