~பயம் இல்லை அம்மா~
உதிரங்களை ஒன்றுச் சேர்த்து எனக்கு உருவம்
தந்தவளே!
ஆசையாக நீ "தொட்டால்" சின்னச் சிணுங்கள்
தந்தேனம்மா!
கருவறைச் சுவற்றிலே என் கால்கள் மோதி
அந்த வலியை மறந்து என் கால்கள்
தொட்டு மகிழ்ந்(தாயே!)!
அங்கும் இங்கும் நான் விளையாட
பன்னீர்க் குடம் தண்ணீரிலே!
இங்கே இருக்க பயம் இல்லையம்மா இனிமையான உன் குரல் இருக்க!
பசியாகத்தான் உள்ளதம்மா உன் அழகு முகம்
நான் காண!
வலிகள் தந்து வந்து விழுந்தேனம்மா உன்
அழகு முகம் கண்டு! உன் மார்புச் சூட்டில் என்
முதல் பசியைத் தீர்த்துக் கொண்டேனம்மா!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
