இணை பிரிய இயலா ரமலான்

உணவு ஏதும் உண்ணாமல்
தீமை நினைவில் எண்ணாமல்

ரௌத்திரம் கொள்ளாமல்
பவித்திரம் கொல்லாமல்

புறங்கள் கூறாமல்
அறங்கள் மீறாமல்

சுயநலம் உதியாமல்
சீலம் மறையாமல்

தன்னையே சீர்படுத்த
பன்பையே மேம்படுத்த

இரக்க குணத்தை
இறக்கி வைத்தது

முப்பது நாள் நோன்பு
இது இறைவனின் மாண்பு

வாழ்வை செம்மைப்படுத்தியே
எம்மை தனிமைப்படுத்தியே

இதோ பிரிந்து செல்லவிருக்கிறாய்
விரைவில்

எம்மை பரிந்து வந்துவிடு
மீண்டும் விரைவில்

எழுதியவர் : சபியுல்லாஹ் (24-Jun-17, 8:58 am)
பார்வை : 205

மேலே