பூவினுள் தேன்துளி --- ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

பூவினுள் தேன்துளி --- ஒரு விகற்ப பஃறொடை வெண்பா


பூவினுள் தேன்துளி பூக்கட்டும் தோட்டத்தில்
காவியம் ஓங்கிடும் கானக வண்டினம்
மேவிடப் போந்துமே மேனி சிலிர்த்திடப்
பாவிகள் பாராப் பருகிடும் தேனினை
ஓவிய மானதே ஒன்று .

ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (24-Jun-17, 6:52 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 72

மேலே