நிரந்தரமானவன் அழிவதில்லை
நிரந்தரமானவன் அழிவதில்லை
கண்ணதாசன் சிறப்பு கவிதைப் போட்டி
எண்ணிலா மக்கள் எடுத்திடும் பிறப்பு
எவருமே அறியொனா வகையில்
மண்ணொடு மண்ணாய் மடிந்திடக் காண்போம் .
மறித்துமே பிறவியை எடுப்போம் .
மழலையர் காளை மடித்திடும் மூப்பாய்
முறையினில் சுழன்றிடும் பருவம் .
தழலிடை வைத்துப் பொசுக்கிய பின்னர்
தனக்கெனப் பெயருமே இல்லை .
தேடியே சோறு நித்தமும் தின்று
தெருக்கதை பலப்பல பேசி
வாடவே வைத்தல் பிறரையும் அதனால்
வாடியே மூப்பினை எய்திக்
கூடவே வருவார் எவருமே இன்றிக்
கூடுதான் தனிமையாக் கிடக்க
ஓடியே வந்து ஓலமும் வைத்து
ஓங்கிய தீயுனுள் இடவே !
இவ்வகை யாக இறந்தவர் கோடி
இவரெலாம் மறந்தொழிந் தனரே .
செவ்வையாய் வாழ எண்ணிய சிலரே
சிறப்புறத் தம்புகழ் நட்டார் .
இவ்வுல கத்தார் மனத்தினில் இவர்தாம்
இமயமாம் இடத்தினைப் பெற்றார் .
அவ்வகை யோருள் கண்ணதாசன்
அழிவிலா நிரந்தரம் ஆனான் !!!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்