நான் ஒர் பட்டதாரி இளைஞன் 2
பல கனவுகளுடன்,
பள்ளி முடித்து,
பொறியியல் படித்தேன்,
.
வாய்ப்புகளை தேடி சென்றேன்,
வாயிற்காவலரிடம் பேசிவிட்டுதான் வந்தேன்,
.
பதிரெண்டு மணிநேர வேலை,
படிக்காதவரின் மேற்பார்வையில்,
பாதிகூட இல்லை வாயிற்காவலர் சம்பளத்தில்,
.
படுத்தவுடன் உறங்குகிறேன்,
பாதியில் எழுந்தால் அழுகிறேன்,
வயிறு நிறைய சாப்பிட்டதில்லை,
வாய் ருசிக்கு தேடியதில்லை -
.
கதிரவன் வருமுன் செல்கிறேன்,
கனவில் மட்டுமே கரையை காண்கிறேன்,
ஒருபோதும் தளரவில்லை,
ஒருநாள் விடியும்
என்ற நம்பிக்கையில்,
என் பயணம் ...........