அடையாளம்
மண்ணில் வந்து
பிறந்துள்ளாய்
உண்மையில்
நீ பிறக்கவில்லை
உன்னை பிறக்க
செய்துள்ளார்கள்
அதற்கு இரு கருவிகள்
அப்பாவும் அம்மாவும்...
நீயே உன்னை
பிரசவித்துக்கொள்
உனக்கு ஒரு அடையாளம்
வைத்துக்கொள்
உன்னையே உனக்கு நீ
அறிமுகப்படுத்து...
நீ மண்ணில்
உதிக்கும் போது
ஒரு அச்சடிக்கபடாத
புத்தகமாய் உதிக்கிறாய்
அன்பு அடக்கம் ஒழுக்கம்
ஆளுமை காதல் கடமை
போன்ற அத்தியாயங்களை
அதில் அச்சடித்துக்கொள்
வெறும் வெள்ளை புத்தகமாக
விட்டுப்போகாதே...
ஈன்றவரின்
அடையாளத்தில்
வாழாதே அது
ஈனதனமான வாழ்க்கை
உன்னால் உன்னை
ஈன்றவருக்கு
அடையாளத்தை
ஏற்படுத்தி கொடுப்பதே
ஒரு சிறந்த வாழ்க்கை ...
காலத்தை உன்னுள்
அடக்கிக்கொண்டு
காலத்தை ஆட்சிசெய்
காலத்தின் கையில்
நீ அடங்கி போகாதே...
பஞ்ச பூதங்களின்
உதவியில் வாழ்கிறாயே
ஆம் தாய்பாலும்
பஞ்சபூதங்களின்
ஒரு அங்கமே
அவைகளுக்கு நீ
என்றாவது
நன்றி சொன்னாயா...?
வாடகையில்லாமல்
பத்துமாதம் இதமாக
வாழ்ந்தாயே அந்த வீட்டு
சொந்தகாரிக்கு நீ என்ன
செய்தாய்...?
குறைந்தது
இந்தவுலகத்தை
விட்டு போகும் போது
நீ வந்தபோன அடையாளமாக
உன் பாதசுவடுகளை
கரடுமுரடான பாதையில்
நடக்க வைத்து அதை
ஒரு பண்படுத்தப்பட்ட
பாதையாக மாற்றிவிட்டு்ப்போ...
வந்தோம் வாழ்ந்தோம்
சென்றோம் என்றில்லாமல்
ஒரு கடுகளவாவது நல்லதை
செய்துவிட்டுப்போ
வையம் அழியும் வரை
நீ வாழ்ந்திருப்பாய்...