வாழ்க்கை வாழ்வதற்கே
வாழ்க்கை வாழ்வதற்கே
வாழ்ந்து பார்ப்போம் வா
கல் நெஞ்சம் உடையோர்
உன் மீது வீசும் காயங்களால்
உன் இன்றைய வாழ்க்கையை வாழாது
எதிர்காலத்தை எண்ணி கலங்கி நிக்காதே
மூட நம்பிக்கையில் சிக்குண்டு
சிறை வாழ்வு வாழாதே
நீ விரும்பும் வாழ்வு உன்னுடன் உள்ளது
அதை யாருக்காகவும் கொடுத்து
கண்ணீர் சிந்தி நிற்காதே
வாழ்வில் வரும் தோல்விகளை
கண்டு வாழ்வை தொலைத்துவிடாதே
தோல்விகள் என்பது வாழ்வின்
ஒரு பக்கம் அதை நினைத்து கண்ணீர் விட்டு
உன் தனித்தன்மையை இழந்து நிற்காதே
தோல்வியை தாங்கி கொள்
வாழ்க்கையை அறிந்து கொள்
கரை சேர்வாய் வாழ்வில்
வாழ்க்கை வாழ்வதற்கே
நீ வாழ்வின் வறுமையை கண்டு
முடங்கி இருந்தால் இனிமை வருவதில்லையே
வாழ்வை உழைப்புகளே வலிமை
அடைய செய்கின்றன உழைப்பின் மீதும்
காதல் செய்து வாழ்க்கையை
வாழ்ந்து பார்ப்போம் வா