குழந்தைப் பருவம் முதுமையில் திரும்புமா

தாயே குழவியாய் உன் மடியில்
கொஞ்சி குலாவி வந்த அந்த
என் மழலைப் பருவம் நீ சொல்லி
நான் அறிந்தேன் -அப்போது
பற்கள் இல்லா பொக்கை
வாயில் நான் உதிர்த்த அந்த
கள்ளமில்லா குழவிச் சிரிப்பு
அப்போது நீ புகைப் படமெடுத்து
நினைவில் வைக்க வழி செய்தாய்
அந்த புகைப் படத்தை கண்டு
என் அந்த குழவிப் பருவம் என்
கண்முன் இன்றும் நிற்கின்ற போது,

என் முன்னே இப்போது நீ, தாயே
உன் முதுமைப் பருவத்தில்,
கூனி குறுகி விட்டாய் தாயே
நீ இப்போது; ஆனால் அந்த
குழவியைப் போல் பிடிவாதம்
வந்துவிட்டது ; அதே சிரிப்பு,
குழவிச்சிரிப்பு உன் முகத்தில்
அந்த குழவியைப்போலவே
ஒரு வெகுளிச் சிரிப்பு
கள்ளமில்லா வெள்ளைச் சிரிப்பு!

முதுமையில் குழந்தைப் பருவம்
எட்டி பார்கிறதோ
அது என்ன சொல்லுகிறதோ ?
குழந்தையைப் போல்
தள்ளாத பருவத்தில் பார்த்து
நடத்த வேண்டுமோ ?

புரிந்துவிட்டது இப்போது !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Jun-17, 8:01 pm)
பார்வை : 82

மேலே