சொக்கட்டான் இல்லா சகுனிகள்

விதைத்து வாழ்பவன்
வீணாகிறான்
வினாவாகிறான்
வாழ்க்கையில்!
உதைத்து வாழ்பவனோ
உயரவே போகிறான்
வளமாகவே !
தாயக்கட்டையை
தரையில் உருட்டுபவன்
தேவையை பெறுகிறான்!
வாயைக் கட்டி
வயிற்றை இறுக்கி
வாழ்பவனோ
அல்லாடுகிறான்
சொக்கட்டான்கள்
உருட்டுவதில்லை
சகுனியை போல!
ஆனால்.
ஆடு புலி ஆட்டம்
அமர்க்களமாய்
ஆடப்படுகிறது !
இன்றைய அரசியல்!
--- கவிஞன் கே. அசோகன்.