கல்வீச்சு

அதிகாரத்தின் சொல்வீச்சு
ஆதரிக்காதோர் கல்வீச்சு
அழிவதோ பொதுச்சொத்து
சரியெனவும் தவறெனவும்
பாறையில் நார் உரிக்கும்
இக்கட்டான நிலைபாடுகள்
பேசித்தீர்க்கும் சங்கதிகளை
மழுப்பிப்பூசி மூடிடும் போது
பொதுஇடங்களில் கல்வீச்சு
ஆகப்போவது ஏதுமில்லை
எடுத்துரைக்க யாருமிலை
எழுந்து நின்று வழிகாட்ட
அழிவு நம்மை நெருங்காது
அழியப்போவோரே அழிவை
தேடிப்போகும் சூழ்நிலை
முடிவை நோக்குங்கால்
பூஜியமே மலிந்திருக்கும்
ராஜியம் நலிவுற்று காணும்
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி
மும்பை