கையாலே அள்ளிச் சாப்பிடுங்கள் உணவை

கையாலே அள்ளிச் சாப்பிடுற பழக்கமும் மங்கிப் போகுதய்யா...
கையில கரண்டியை பாரு.
அது மேலை நாட்டு ஜோரு..

கையாலே அள்ளித் தின்றால் அசுத்தமாம்.
கரண்டியாலே அள்ளித் தின்றால் சுத்தமாம்..
கையாலே சாப்பிட்டாலும் உள்ளங்கை பாடாமல் ஐந்துவிரல்களாலே அள்ளித் தின்ன வேண்டுமாம்...
உள்ளங்கை பட்டுண்டால் தரித்திரமே பீடிக்குமாம்...
என்னவொரு பிதற்றல்!..

வெளிநாட்டுக்காரர்களுக்கு கை கழுவ சோம்பேறித்தனம்...
அதனாலே, கரண்டியாலே தின்றுவிட்டு வேலைக்காரர்களைக் கொண்டு கழுவி விடுகிறார்கள்...
இதையே நாகரிகமென்று பலர் கடைபிடிக்கிறார்கள்...
என்னவொரு அறியாமை!..

உள்ளங்கை பட்டு சாப்பிட்டால் தான் என்ன?
உள்ளங்கையின் வழி பிறர்க்கு ஆசி வழங்குகிறோம் விரல்களை விரித்து...

உண்மையில் உள்ளங்கை பட, கையாலே பழைய சோற்றை அள்ளித்தின்றாலும் அமிர்தமாய், அறுசுவை உணவாய் தித்திக்குதே..

சோம்பேறிகளே,
நாகரீகக் கோமாளிகளே,
உங்களைப் போன்றே நானும் அறியாமையில் மூழ்குவேனோ?

வலக்கையில் காயம் பட்டால், உணவே அதற்கு மருந்து..
கையாலே பருகுங்கள் அறுசுவை விருந்து..

புரிகிறதா என் கருத்து?
புரிந்தாலும் புரியாதது போல் செயல்படும் உன் மனதைக் கொஞ்சம் வருத்து...
பகுத்தறிவை செயல்படுத்து...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (29-Jun-17, 10:28 am)
பார்வை : 379

மேலே