சக்தி மகாசக்தி
சக்தி மகாசக்தி
நீருபூத்த நெருப்பு போல்
பெண்களிடம் புதைந்து
கிடக்கிறது
பாலூட்டும் வர்கம் பெண்கள்
மனிதனின் அடிப்படை
சக்தியே தாய்பால்தான்
அந்த சக்தியான தாய்பாலை
புகட்ட எத்தனை சக்தியை
பெற்றிருக்க வேண்டும்...
பெண்களின் பங்கு
சமுதாயத்திலே
அளவிடமுடியாதது
ஈசனின் அளவுகோலில்
ஐம்பது சதவீதம்
அர்த்தநாரீசுவரர் கோலமாக
அதையும் தாண்டி
பஞ்சபூதங்கள் போல்
பெண்மைக்குள் தான்
எத்தனை எத்தனை
சக்திகள்...
அவளுக்கு
ஆக்கவும் தெரியும்
ஆளவும் தெரியும்
அழிக்கவும் தெரியும்...
சில காட்டு மிராண்டிகள்
பெண்மையின்
மகத்துவம் தெரியாமல்
பெண்களை
போகப்பொருளாகவும்
கொத்தடமைகளாகவும்
அவர்களின் உழைப்புக்கு
ஏற்ற ஊதியம் தராமல்
வஞ்சித்து வாழ்கிறார்கள்...
பெண்களை பாதுகாப்போம்
பெண் சிசுக்களை
அழிக்காமல் வாழவைப்போம்
பெண் குழந்தைகளின்
கல்வியில் அக்கறை காட்டுவோம்
தாயாக தாரமாக மகளாக தங்கையாக குடும்பத்தில்
வாழும் தெய்வங்கள் இவர்கள்...
கல்வியாளராக
மருத்துவராக
செவிலியர்கள்களாக
ஆட்சியாளர்களாக
விஞ்ஞானியாக
இலக்கிய பணியில்
கவியாகவும்
எழுத்தாளர்களாக
சமுதாயத்தில்
களையெடுக்கும்
காவல்துறை அதிகாரிகளாக
பிரகாசிக்கிறார்கள்
போற்றுவோம்
வணங்குவோம்
பெண்மையை....