இடம்
மகனே!
கருவறையில்
இடம் கொடுத்த எனக்கு
சில்லறை வேண்டாம் !
ஜில் அறையும் வேண்டாம்!
உன்
இல்லத்தில் - ஓர்
இருட்டறை கொடு!
ஒருநாள் தங்கிவிட்டு
போகிறேன்!
கல்லறை - என்னை
கையசைத்து அழைப்பதற்குள்...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
