நீநீயெனநீ மட்டும்

நீ!
நீதான் யாரடி?
நீயென நினைத்து நினனைவுகளை மட்டும் நிலையில் சில அணங்குகள்
நிறைக்கிறார்கள்....
நீ!
நீதான் யாரடி?
நீ நிலவா?
நீயும் தொலைவில் நிலவும்...
நீ தீயா?
நின்னில் நீந்த முடியவில்லை...
நீ நீரா?
நின் தாகம் தீரவில்லை...
நீ உயிரா?
நின் கண்ணீரில்லை...
நீ அகலா?
நின் ஒளியில்லை....
நீ சிறையா?
நின் குழலில்லை....
நீ பிழையா?
நீயின்றி நானில்லை...
நீ!
நீதான் யாரடி?
நிதமும் நின்னை
நீயென நினைந்து
நான்....!

எழுதியவர் : சுரேஷ் குமார் (29-Jun-17, 11:42 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 218

மேலே