பறந்து செல்ல ஆசை
பறந்து செல்ல ஆசை...
குழந்தைகளின் கனவுகளை முடமாக்கும் குடும்பப் போருளாதாரம்...
ஆடம்பரம் பெற அழிக்கப்படும் வாழ்வாதாரம்...
குழந்தைகளின் கனவுகளை வீணென்றுரைக்கும் பெற்றோர்கள்...
எந்நேரமும் வெளிநாட்டிற்கு பறந்து சென்று ஆடம்பரக் கேளிக்கைகளில் ஈடுபட்டு தற்பெருமை பேசும் பிரதமர்...
தனது நாட்டில் ஏழை மக்களைக் காண நேரமில்லை...
மேலைநாட்டு ஆடம்பரத்தலைவர்கள் காண, கேளிக்கைகளில் கலந்து கொள்ள நேரமுண்டு...
போதுமடா சாமி...
உங்க நாட்டும், உங்க கொள்கையும்...
நாடுகளாகப் பிரித்ததே அறியாமை.
இதில் அரசாங்கமென்று அதிகாரம் கொள்வது வடிகட்டிய மடமை..
உங்க தலைமையும் வேண்டாம்.
உங்க சமுதாயமும் வேண்டாம்..
பறந்து செல்ல விரும்புகிறேன்...
மனிதத்தடைகளை உடைத்தெரிந்து,
உலகில் எங்கு வேண்டுமாலும் நினைத்த நேரத்தில் பறந்து செல்ல விரும்புகிறேன்...
எனது சுதந்திரம் எனது பிறப்புரிமை...
உங்களிடம் நான் ஏன் அனுமதி கேட்டு நிற்க வேண்டும்?
உங்களுடைய சுதந்திரம் உங்களுக்கு மட்டுமே...
எனது சுதந்திரத்தை பறிக்க எண்ண வேண்டாம், பதவி கொண்டு...
உண்மையறியா மூடர்களே பணமும், பதவியும் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமென்ற நினைப்பா?
அதோ, காலன் வந்துவிட்டான்...