மறக்கத்தான் நினைக்கிறேன்
மறக்க தெரியவில்லை
என் காதலை
வெறுக்க முடியவில்லை
உன் முகத்தை...
சிப்பிக்குள் முத்துப்போல்
உன் நினைவுகள்
என் இதயத்தில்
நீ இல்லாத வாழ்க்கை
எனக்கு பித்தனின்
வாழ்க்கை...
சுக்குநூறாய் உடைந்த
என் இதயத்துகள்களை
எல்லாம் எடுத்து
ஒட்டவைத்து பாரடி
உன் உருவம் தெரியும்...
தீபம் அணையும் முன்பு
பிரகாசிப்பது போல்
ஏனோ இன்று என் மனதில்
சில இன்ப அதிர்வுகள்
நீ என் கனவில்...
விடிந்தாலும்
என் உணர்வுகளுக்கு
விடியலில்லை
நீ சிரித்து சிரித்து
எனை சிதைத்த
அந்த நாள் ஞாபகங்களில்
முழ்கிப்போகிறது
என் நினைவுகள்...