துப்பட்டாவை தந்துவிட்டுச் செல்

ஆஹா எத்தனை முறைப்பு இந்த முகத்தில்
காக்க வைத்த கோபமா என் கண்ணம்மாக்கு
புதிதாய் கல்லூரி பயணப் படும் என் கன்னி தேவதையே
இந்த வண்டூரும் கண்களில் வண்ண நிலாக் கன்னங்களில்
உன் அழகு இரட்டிப்பாகிக் கிடக்கிறதே இப்போது
உன்னைச் தொடர்ந்து சீண்டவேண்டும்
போலிருக்கின்றதடி இதற்காக எப்போதும்
சுவையூறும் சொல் வண்ணக் குயிலே
அழகூறும் நடைத் தோகை மயிலே
இரவில் உடன் உறங்கும் நிழற் துயிலே
என் வாழ்வை எழுதி வைத்த உயிலே
ஒரு நிமிடத் தாமதத் தவிப்பு இங்கு உன் கோபம்
நீயின்றி நான் தவிப்பேனே நாலாண்டு
இது எனக்கு யார் விட்ட சாபம்
ராமன் வன வாசம் செல்ல முன்பு
தன் தம்பிக்குக் கொடுத்தான்
அவன் கழலை ஞாபகமாய் அதுபோன்று
உன் தோள் துயிலும் இந்தத் துப்பட்டாவை
எனக்கு தந்து விட்டு செல்
என் தலையணையில் வைத்துப்
பொக்கிஷமாய் பூஷிப்பேன்
அதனை நீ வரும் வரை உன் ஞாபகமாய்
ஆக்கம்
அஷ்ரப் அலி