நீ நம்ப போவதும் இல்லை

சிற்றிடையா ,சிறுகொடியா எது என
இன்னும் என் ஐயம் தீரவில்லை
சிற்றிடை மேல் ,சிறுகொடிமேல்
பற்றிக்கொண்ட பெருந்தனங்களில்
என் பார்வை என்றும் இல்லை !
சிவப்பு ரோஜாவின் வண்ணம் பூசிக்கொண்ட
செவ்விதழில் முத்தமிட எண்ணமில்லை !
அன்ன நடையாய் நடந்து போக எண்ணமெல்லாம்
பின்னழகில் நோகவில்லை !
உன் பார்வை வீச்சில் பத்திரமாய் இருந்த நான்
தொலைந்து போகவில்லை !
சித்திரம் போல் உன் அழகை எல்லாம்
அணு அணுவாய் ரசித்து ரசித்து தூக்கம் கேட்டு போகவில்லை !
உன்னை காதலித்து காதலித்தே சத்தியமாய் நான்
கவிதை ஏதும் எழுத வில்லை !
இவை யாவுமே உண்மை என நான் சொல்லிவிட்டால்
நீ நம்ப போவதும் இல்லை !