கோடைமழை

பசுமை நிறைந்த தளிரை
காயவைத்து
உதிரவைத்து காயப்பட்ட
காயத்திற்கு
வாய்க்கரிசி தூவ வந்த கோடைமழை
வலிதாளாமல் அழுகின்ற சருகின்மேல்
தூரல்களாய் வந்துவிழுந்து
ஆறுதல்
கூறுகின்றது போல் வரும் கோடைமழை
வறண்டுபோன நீர்நிலைகள்
ஆதலால் மனதளவில்
துவண்டுப்போன விவசாயிகள்
வேதனை கொள்ள
அரண்டுவந்து ஆறுதல் கூறும்
கோடை மழை
வருத்தும் சூடு போதாதென
சூட்டை கிளப்பி
நோய்களை வரவழைத்து
வாமுட்டு போட
வைதியரை வாழவைக்கும்
கோடை மழை
பேய்ந்தால் பேய்ந்தபடி
உடமைக்கு சங்கூத
காய்ந்தால் காய்ந்தபடி
நிலம் வெடித்து காய
கடமைக்கு வந்து போகும்
கோடை மழை
பகலில் அனல்காற்று வீச
இரவில் கண்
அயரவிடாத புழுக்கம் என்ற
தொல்லைகள்
நிலவீரலே நிரம்பா தூரல் இந்த கோடைமழை
நன்றி- ( தினமணி கவிதைமணி)