தாகம்
*கார்மேகம் புடைசூழ மும்மாரி பொழிய ஏரி குளம் வழிய வழி வகுத்திடாதோ
மனதிறங்கி பனியுதிர்ந்து மலைசூழ படர்ந்து ஆறாய் வழிந்தோடிடாதோ
சுடும் வெயிலும் தாங்க முடியாது கிடைத்தத் தண்ணீரும் தாகம் தீராது
மாயுமுயிர் நிலைமாற
வயல் வெளிகள் தென்றல் வீசி அசைந்தாட அதைக் கண்டு உழவர் மனம் குளிர்ந்திடாதோ
அந்நேரம் பார்த்து கொதி கொதித்து ஜலந்தேடி வலம் வரும் " சூரியதாகம்" தணிந்திடாதோ