ஐக்கூ முயற்சி

ஐக்கூ முயற்சி....

வேகமாக நடக்கின்றான்
மெதுவாக கரைகிறது
கொழுப்பு...!

வருமானம் பெருகிட
சுகாதாரத்துறையின் புதுத்திட்டம்
குட்கா விற்பனை...!

தனியாக நேரம்
ஒதுக்குகிறார் முதலாளி
வியர்வையை வெளியேற்ற....!

நடைபயிற்சிகூட பிடித்திருக்கிறது
ராஜாவின் இசையுடன்
நடக்கும் பொழுது...!

தும்பி பிடித்த சிறுவன்
இறைவனாகிப் போனான் அத்தும்பிக்கு
மீண்டும் பறக்கவிட்ட போது...!

தலைப்புச் செய்தியில் வரவில்லை
மின்சுடுகாட்டில் உயிரோடு எரிந்த
ஈக்கள் பற்றி.....

வீட்டுப்பாடம் செய்யா சிறுவன்
சமயத்தில் காத்தது
பள்ளி மணியோசை...!

ஆடு மாடுகள்
விழுங்க முடியாமல் தோற்றன
நீரில் மிதக்கும் நிலவை ....!

உள்கடந்து தேடி
உணர்ந்து கொண்டேன்
நானும் கடவுளென்று...!

இறைவனுக்கு பெயர் தேடினேன்
ஒரு பெயர்தான் பொருந்துகிறது
அப்பா....!

வெய்யிலின் தாக்கம்
ஓடி ஒளிந்து கொண்டன
கார் மேகங்கள்...!

நள்ளிரவு கொண்டாட்டம்
அத்தாணி மண்டபத்தில்
புதிய வரி அறிமுகம்...!

அரசிற்கு ஆனந்தம்
ஏழைகளுக்கு ஏமாற்றம்
புதிய வரிகள்....!

தொடர் "ரைடு" மழையால்
சனநாயகச் சாயம் கரைகிறது
நரிகளுக்கு...!

கதிராமங்கலம்
கதிர் அமங்கலமானது
ஆட்சியில் 24ஆம் புலிகேசிகள்....!

இங்கி பிங்கி பாங்கி
விளையாட்டு நின்றுபோனதோ..?
மாற்றமில்லா அமைச்சரவை....!

வீசினான் ஒருவன்
திருப்பியடித்தான் மற்றொருவன்
கிரிக்கெட்....!

பெரிய மூளை
"குட்டி" கண்டுபிடிப்பு
"கலாம்சாட்"....!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (2-Jul-17, 5:28 pm)
Tanglish : aikkoo muyarchi
பார்வை : 275

மேலே