காதல் சொல்தல்
[] காதல் சொல்தல் ...
--------------------------------------------------
நேரெதிரெ நெருங்குகிறது
ஒரு தொடர்வண்டி ..
தண்டவாளத்தின் நடுவில்
நகரமுடியாமல் நான் ..!
பேரழகாய் நெருங்குகிறாள்
என் அவள் ..
காதலை சொல்வதற்காக
காத்திருக்கிறேன் நான் ..!
இரண்டு நிகழ்வுகளில்
இரண்டாம் நிகழ்வுக்கே
என்றும் முதலிடம் ..
உயிர் அச்சம் தருவதில் ..!
மரணம் நிச்சயமானதால்
கண்கள் மூடி வரவேற்றேன்
அந்த தொடர்வண்டியை...
நெடுநேரம் கடந்தும்
இன்னும் துடிக்கிறதே இதயம் என்று
கண்கள் திறந்தபோது
கனவா என்று தோன்றியது
காரணம் -
கை தொடும் இடைவெளியில்
நின்று நின்றிருந்தது அந்த தொடர்வண்டி ..!
பெருமூச்சு விடும் இந்த நொடியின்
அனுபவம் தான்
அவளிடம் காதலை சொல்லி முடித்த
தருணத்து அனுபவமும் ..!
இன்னும் -
தண்டவாளத்தில் தான்
கிடக்கிறேன்...
தொடர்வண்டியும் தொடரலாம்
இல்லை என் வாழ்க்கையும் தொடரலாம்
அது அவளின் முடிவை பொறுத்தது ...
யாழ்..