வலிகள் - சகி
ஏனோ தெரியவில்லை
நான் விரும்பிய எதுவும்
கிடைக்கவில்லை என்வாழ்வில்..
மிகவும் மனம்
விரும்பி ஆசைகளோடு
கனவு காணுவேன் ......
அனைத்தும் கனவுகளாகவே
கலைந்துவிடும் .....
கலங்கி அழுவது
என் இருவிழிகள் மட்டும்மல்ல ....
கனவுகளை சுமந்த அனைத்தும்
ஏமாற்றம்கண்ட என்
வலிநிறைந்த இதயமும் தான் ....
யாரிடம் சொல்லி
அழுது ஆறுதல்
தேடுவதென்று தெரியவில்லை......
என் தலையணைக்கும்
என் தனிமைக்கும்
மட்டுமே தெரியும்
என் வலிகள் ...