பணமில்லாதான் வாழ்வு

" இறைவா! எனது விருப்பத்தை நிறைவேறவிடாமல் தடுப்பதில் உனக்கு அவ்வளவு ஆனந்தமா? ", என்று இறைவனிடம் அடிக்கடி கேட்டுள்ளேன்...

பல துன்பங்களுக்கு மத்தியில், " நானென்ன உனது கைப்பொம்மையா அடிக்கடி கீழே எறிந்து விளையாடுகிறாயே! தீயில் வாட்டி உருக்கிறாயே! ", என்றெல்லாம் இறைவனை நான் திட்டியதும் உண்டு...

எதற்கும் அவன் பதில் தரவில்லை...
ஆனால், வாழ்வின் உண்மையை உணர்ந்து கடந்து செல்ல என்னுடனே துணையாய் வருகிறானென்பதை உணர்கிறேன்...

எதிரிப்படைகள் மனித வடிவிலான மிருகங்களாய் சூழ வரும் போதிலும் தன்னம்பிக்கையோடு எதிர்த்து கொண்டு போராட சிந்தனையின் வழி வெளிப்பட்டு காக்கிறான்...
ஒலிக்கிறான்...
மடமை ஒழிக்கிறான்...
ஒளியாய் பிரகாசிக்கிறான்...

இருந்தாலும் பணத்தின் வழி, ஆடம்பரத்தின் வழி தட்டழியும் உலகில் ஏழையின் சொல் அம்பலமாகுமா?

அறிவுக்கண்களை மூடியுள்ள திரையை இச்சமூகம் நீக்காதவரை உண்மையின் தரிசனமும், நிதர்சனமும் கிட்டாது...

என்னுடன் தினமும் பழகுபவர்களே என்னைப் புரிந்து கொள்ளவில்லையெனில் வாய் திறவாத ஊமையாக இருந்துவிடலாமென்று தோன்றினாலும் கேட்கிறதா, இந்த நெஞ்சம்??

உண்மையாய் உணர்வதை உரக்க உரைக்கவே செய்கிறது,
இறை தூண்டலாய்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (4-Jul-17, 7:09 pm)
பார்வை : 887

மேலே