வழி தேடி

நடக்கிறேன்
பாதைகளற்ற சாலையில்.....
எட்சியாய் விசுமுகிறது
விரக்தி

பார்க்கிறேன்
நிறங்களில்லாத சாயங்களை........
கலைந்து மறைகிறது
மகிழ்ச்சி

கேட்கிறேன்
ஒலிகளற்ற அலைக்கீற்றை..........
உடைந்து கரைகிறது
உணர்ச்சி

முகர்கிறேன்
வளி சேர்க்காத மலர்களை.........
நாசியில் மிரட்டுகிறது
மரணம்.......

எழுதியவர் : (4-Jul-17, 8:34 pm)
சேர்த்தது : sanmadhu
Tanglish : vazhi thedi
பார்வை : 76

மேலே