குறுஞ்செய்தி அவளிடமிருந்து

[] குறுஞ்செய்தி அவளிடமிருந்து...
-----------------------------------------------------------------------

ஏழு நாட்களுக்கு -
ஒரு முறையேனும்
எழுத்துக்களில் 
என்னோடு பேசிவிடு..!

ஏழு ஜென்மத்திற்கும்
எனக்கு அதுவே போதும்..!

உன் குறுஞ்செய்தி
வராத வாரம் தான் தெரிந்தது
என் ஒவ்வொரு
வாரத்திற்கான புத்துணர்சியும்
உன்னிடம் உள்ளது..!

காதலனாக என்று இல்லை
நண்பனாக வேனும்
தூரத்து சொந்தமாக வேனும்
அக்கம் பக்கத்து
தெரிந்தவனாக வேனும்
இல்லை -
உன் விரோதியாக என்னை
சபித்தேனும் நீ
என்னோடு தொடர்பில் இரு...

வாரத்திற்கு ஒரு முறை
வார்த்தைகள் வழியாக
உன்னை எனக்கு
வாசிக்க கொடு...
வாரம் வரம் ஆகும்..!

ஏனென்றால் -
என் பெரும் ஆனந்தம்
உன் குறுஞ்செய்தியில்...

வருமாயின் குறுஞ்செய்தி
உன்னிடமிருந்து -
வாரங்கள் கடக்கும்
வலிகளை மறந்து
உன்மையில் அது தான்
கவலைக்கு மருந்து..!


- யாழ்..

எழுதியவர் : யாழ் கண்ணன் (4-Jul-17, 10:58 pm)
சேர்த்தது : யாழ் கண்ணன்
பார்வை : 514

மேலே