காதல் பிறந்த நொடி

இமைகள் மூட எத்தனிக்கும் சமயம் உன் நினைவு
திகைத்து எழுந்து அமர்கிறேன்
நேரம் இரவு 1.27 பெப்ரவரி 14
மீண்டும் ஒரு காதலா
எண்ணம் மறுத்து துயில முயல்கிறேன்
இமை பிரித்து உள்ளே நுழைய முயற்சிக்கிறாள் அவள்
மறுக்கிறேன்
விழியை கசக்கி அவளை வெளியே தூக்கி ஏறிய
இமை சுருக்குகிறேன் விழி உருட்டுகிறேன்
மீண்டும் ஒரு காதலா
அவளிடம் வாதிட முயல்கிறேன்
பெண்னே!
நான் தோற்றவன்
நான் உன்னிலும் மூத்தவன்
நான் கனவுகள் தேடி யொடுபவன் செலவாளி
நான் பொய்யன்
நான் காதலிக்க பட்டவன்
நான் காதலை கண் முன் தொலைத்தவன்
நான் பெண்ணிடம் பேச தெரியாதவன்
நான் தாழ்த்தப்பட்டவன்
அவளை விரட்ட வார்த்தைகளால் அரண் அமைக்கிறேன்
மீண்டும் ஒரு காதலா வேண்டவே வேண்டாம்
அந்த வலி வேண்டவே வேண்டாம்
"அவளை கண்களில் இருந்து நெம்பி தள்ளிவிடு"
என் மூளை கைகளுக்கு உத்தரவு இடுகிறது
என் கைகளோ அசைவற்று
என் உத்தரவு மதியாது
அவ்விடம் அப்படியே கிடக்கிறது
"துரோகியே, அவளை தள்ளி விடு;
உன்மேல் படிந்த கரை இன்னும் அழிய வில்லை- அதற்குள்
மீண்டும் ஒரு காதலா
இமை மூட மறுத்த அந்த நொடிகளை நினைத்துப்பார்
மீண்டும் ஒரு காதலா
கொடியனே தூக்கி ஏறி அவளை"
முயல்கிறேன்
என் கை அசைய மறுக்கிறது
இதயம் கனக்கிறது
"இன்னும் மறுமுறையாய் நான் தோற்க விரும்பவில்லை
கண்ணா தூக்கி ஏறி அவளை"
இயங்கு கையே இயங்கு
கண்கள் தேம்பி கண்ணீர் வழிய- அப்பொழுது
கண்ணீரோடு கரைந்து போகிறாள் நிலை இல்லாமல் அவள்
நிம்மதி பெருமூச்சு விடுகிறேன்
இதுவரை அசைவற்று இருந்த அந்த கை
இதுவரை என்னை சட்டை செய்யாத அந்த கை
நொடிகளில் அவளை பற்றி பிடிக்கிறது
தாமதியாமல் என் கண்ணீர் துடைத்து
அவளை என்னுள் திணிதே விட்டது
அவள் என்னுள் நுழைந்தே விட்டாள்
படர்ந்து என் ரத்தினுள் கலந்தே விட்டாள்
அடி பெண்னே!
மீண்டுமாய் ஒரு காதல்
மீண்டுமாய் ஒரு காதல் கொன்டேன்
மூளை அவளை சிந்திக்க தொடங்கியேவிட்டது
அவள் கண்களை
நடு நீங்கி வகிடு எடுத்து சீவிய அவளது தலை அலங்காரத்தை
நெற்றி மீது இருக்கும் சிறு சந்தன கோடு,
கீழே கரும் பொட்டு
அவள் கரும் நிறம்
அவளது உதட்டு பிளவுகள்
முடியவில்லை உன்னை நினையாமல்
பெண்னே!
நான் உன் காதலுக்கு தகுதியானவன் அல்லன்
நான் உன் அன்பை கிரகிக்க போகிறவன் அல்லன்
நான் உன் கரம் கோர்க்க போகிறவன் அல்லன்
உணர்ந்தே இருக்கிறேன்
ஆயினும் இந்த நொடிப்பொழுதில் சொல்லுகிறேன்
பெரும் கோட்டை என்னிடம் இல்லை
பெரும் கனவு மட்டுமே உண்டு
செல்வச்செழிப்பு இப்பொழுது என்னிடம் இல்லை
செல்வம் சேர்க்கும் திறன் என்னிடம் உண்டு
பெற்றோர் தந்த அடையாளம் அன்றி வேறு இல்லை- உன்
பெற்றோரை காட்டியிலும் காட்ட அன்பு என்னிடம் உண்டு
என் உயிர் பிரியும் மட்டும் உன்னை காதலிப்பேன்
உனக்கு தகுதி ஆனவன் இல்லை எனில் மறுத்துவிடு
என்னையும் உரைக்க படாத என் காதலையும் !!!

எழுதியவர் : அஜித் குமார் A V (5-Jul-17, 2:46 pm)
சேர்த்தது : அவே அஜித்
பார்வை : 777

மேலே