சிக்கன சுந்தரி

தாய் பால் இல்லை; பசுப்பால் கொடுக்கவேண்டிய சூழ்நிலை; அந்த தாயின் புத்திச்சாலிதனம் தன் வாழ்க்கையையே இழக்கவைத்து அவதிப்படும் சம்பவம்-

அரை லிட்டர் பால் வாங்கிவருவாள்; அதில் அரை லிட்டர் தண்ணீரை ஊற்றி சூடுபண்ணியப்பின் குழந்தைக்கு கொடுக்க; ஒரு கப்பு பாலை எடுத்துக்கொண்டு; அதே கப்பால் ஒரு கப்பு தண்ணீரை ஊற்றி சரிசெய்துவிடுவாள்-

இப்படியாக ஒவ்வொரு தடவையும்
செய்வது வழக்கம்; பால் குறையவே குறையாது ஒரு லிட்டர் பால்; இருந்தது இருந்தபடியே இருக்கும் ஆனால் குழந்தை அழுதது அழுதபடியே இருக்கும்

அவள் பாலை கொடுக்கிறாளா இல்லை பச்சைத்தண்ணியை கொடுக்கிறாளா
அது அவள் மனசாட்சிக்கே வெளிச்சம்

அவள் வீட்டுக்கு வருவோர்க்கும் அதே பாலில் தேனீரும் போட்டுத்தருவாள் ஆனாலும் பால் ஒருலிட்டராகவே இருக்கும்

சாயங்காலம் கணவன் வருவான் அவனுக்கும் தேனீர் போட்டு கோடுப்பால் ஒரு லிட்டர் பால் குறையவே குறையாது

இதுதான் தினந்தோரும் நடந்துகொண்டுவருகிறது ஆனால் தினந்தோரும் கணவன் குழந்தைக்கு பாலுக்கென்று ஐம்பது ரூபாய் தவராமல் கொடுப்பது வழக்கம்

அந்த ஐம்பது ரூபாயில் பாதி பணத்தை சேர்த்து வைத்து பெரிய தொகையாகையில் கணவனுக்கு தெரியாமல் ஊருக்கு கொண்டுபோய் நகையோடு திரும்பிவந்து கணவனிடம் எங்க அம்மா வீட்டில் எடுத்து கொடுத்தாங்க என்று பெருமை அடித்துக்கொள்வாள்

அக்கத்து பக்கத்தில் இருக்கும் கணவன்மார்கள் அதைக்கேட்டுவிட்டு அவர்களுடைய பொண்டாட்டிமார்களை வெறுக்க தோன்றிவிடுவார்கள் சொல்லி சொல்லி இவளை சுட்டிக்காட்டி சண்டையிட்டு கொண்டு அம்மாவீட்டுக்கு துரத்திவிடுவார்கள்

ஒரு நாள் இவளுடைய ஊர்காரர் ஒருவர் வந்தார்
மனைவி காய்கறி வாங்கிவர கடைவீதிக்கு சென்றுவிட்டாள் அவளின் கணவன் மட்டும் வீட்டில் இருந்தான்

பாப்பா ஊருக்கு வரும்போது அவுங்க அப்பா அம்மா ஊர்ல இல்ல இரண்டு கரும்பு வெட்ட பக்கத்து ஊருக்கு போயிட்டாங்க பாப்பாவுக்கு நகை வாங்கனும் கூடவாங்கன்னு கூட்டிட்டு போனது மூனுசவரன்ல சங்கிலி எடுத்து கொடுத்தேன் அதுல ஆயிரத்து இருநூறு ரூபா நான் அதுகிட்ட கடனா வாங்கியிருந்தேன் அதை என்மகனபார்க வந்தப்போ அவன்கிட்டே கடன் வாங்கனதை பத்தி சொன்னேன் அவன் காசை கொடுத்து முதலில் போய் அதை கொடுத்துட்டு வாங்கன்னு கொடுத்து அனுப்பினான் அதான் வந்தேன் இந்தாங்க பாப்பா வந்த பிறகு எதார்த்தமாக கொடுத்துடுங்க அப்போ நான் வரேங்க

சரிங்க என்று பணத்தை வாங்கிக்கொண்டு நீங்க இங்க வரும்போது இவளோட அப்பா அம்மா வந்துட்டு இருந்தாங்களா

இல்லப்பா அவுங்க உடனே வரமாட்டாங்க கரும்பு வேலை முடிஞ்ச அப்புரம்தான் வருவாங்க பாப்பாகூட அவுங்க வீட்ல இல்லங்கிறதுக்காக ஒருவாரத்திலேயே இங்க வந்துட்டது

சரிங்க இருந்து சாப்பிட்டுவிட்டு போலாமே என்றான் அவரும் இல்லப்பா இன்னொரு நாளைக்கு எப்போதாவது
வந்தா சாப்பிட்டுவிட்டு போறேன் பையன் உடனே வரச்சொன்னான் அதான் என்று சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டார் வந்தவர்

அப்பாவும் அம்மாவும் ஊர்ல இல்ல நகையை அம்மா போட்டது என்கிறாளே அது எப்படி சாத்தியம் ஆகும் எங்கேயோ தப்பு நடக்குதே சரி ஓடவிட்டு பந்தயத்தை கட்டுவோம்

குழந்தை அழுதது பாலை எடுத்து பீடிங்கு பாட்டிலில் ஊற்றப்போனான் பால் பச்சைத்தண்ணி போல இருந்தது பால் குண்டானை கழுவ தண்ணி ஊற்றி வச்சிருப்பா என்று நினைத்து விட்டுவிட்டு பாலைத்தேடுகிறான்
கிடைக்கவில்லை குழந்தையை தூக்கிக்கொண்டே போய் அரைலிட்டர் பால் பாக்கெட்டு வாங்க

பால்காரன் சார் நாளைக்கு பால் வராது உங்கமனைவி தினம் தவறாம அரை லிட்டர் வாங்குவாங்க அதனால இன்னைக்கு ஒருலிட்டரா வாங்கி வச்சீங்கன்னா நாளையை சரிகட்டிடலாம்
என்றான்

சரி கொடுங்க என்று வாங்கிக்கொண்டு வந்து சுடவைத்து ஆற்றி குழந்தைக்கு குடிக்கவைத்துவிட்டு யோசிக்கலானான்

என்னடா அது மூனுதடவை அரை லிட்டர் மேணிக்கு ஒன்னரை லிட்டர் வாங்குறதா இவ சொல்றா பால்காரன்ஒருநாளைக்கு அரைலிட்டர் தவறாம வாங்குறதா சொல்றான் ஏதோ தப்பு நடக்குது பொறுமையா டீல் பண்ணனும்

இவ பொய்யை நம்பி இவளால இண்டுமூனு குடும்பம் வேற தண்ணீரில் மிதக்குதே அந்த அப்பாவிகளோட சாபமும் பாவமும் இவளை சும்மாவிடுமா இல்ல நானோ கணக்குபாத்து குடும்பம் நடத்துறவன் நான் கொடுத்தாதான் உண்டு அதை மீறி நகைவாங்கும் அளவுக்கு இவளுக்கு பணம் எப்படி வந்தது ஒரு வேளை ச்சா•••• ச்சா•••••!!!

மனைவி உள்ளே நுழைந்தாள்•••குழந்தை அழுததா பால் குடிக்க வச்சீங்களா நிம்மதியா தூங்குற மாதிரி இருக்கு ஏங்கிட்ட மாத்திரம் அடம் புடிக்கிறது இதென்ன இங்கவேற பால் இருக்கையிலே இன்னொரு பாத்திரத்திலேயும் பால் இது ஏது........

இரண்டு பாத்திரத்திலேயும் உள்ள பாலுக்கு வித்தியாசம் தெரியிதா அது பாலா இல்லபச்சத்தண்ணியா இதகுடிச்சா குழந்தை எப்படி அழாம இருக்கும் ஆமாம் இந்த பாலை எந்த கடையில வாங்கினே

எப்பவும் வாங்குற நம்ம வீட்டு எதிரில் இருக்கும் சம்பூர்ணம் டேயரியிலதான்

எத்தன வேளைக்கு வாங்குவே•••

ஏன் மூனு வேளையும்தான்•••

மூனு வேளையுமா இல்லை ஒரே வேளை வாங்கி மூனு வேளையும் ஒப்பேத்துறீயா

ம்...ம்.....ம்.... ஆமாம் ஒரே வேளைதான்••••

அப்போ அந்த மீதி இரண்டுவேளை பணம் தான் உங்க அம்மா வீட்டுல போட்டதா இப்போ நகை மாட்டிக்கிட்டு வந்து இருக்கே••••

இல்ல••••எங்க அம்மாதான் ••••••-

ஆய்......மறுபடியும்........மறுபடியும் நீ உண்மையை மறைக்கிறே; நீ ஊருக்கு பொய் சொல்லிட்டு போன ஊர்ல உங்க அம்மாவும் இல்ல உங்க அப்பாவும் இல்ல வெளி ஊருக்கு கரும்பு வெட்ட போயி இரண்டு வாரத்துக்கு மேல
ஆயிடுச்சி; உங்க அம்மாவும் அப்பாவும் ஊர்ல இல்லாததால வேறொரு ஆளை கூட்டிட்டு போயி நகை எடுத்திருக்கே பத்தாதற்கு கூடவந்த ஆளுக்கு கடன் வேற கொடுத்து இருக்கே அந்த பணம் தான் இந்த பணம் இந்தா புடி உனக்கு நகை வேணுமுன்னா ஏங்கிட்ட கேட்டு இருக்கலாமே ஏன் இப்படி பண்ணே அந்த சிசு பாவத்தை ஏன் கொட்டிக்கிறே

அது சரி அரைலிட்டர் பால் எப்படி ஒருலிட்டர் ஆக்கினே அரைலிட்டர் தண்ணீரை ஊற்றி தானே

ஆமாங்க......

படுமோசமான பச்சத்தண்ணியா இருக்கே அது எப்படி

ஒரு கப்பு பாலை மொண்டுகிட்டு பதிலா ஒரு கப்பு தண்ணீரை ஊற்றிடுவேன்

இது என்ன புள்ளையா இல்ல மரப்பாசி பொம்மையா இந்த பாலை ஊத்தினா
அந் புள்ளைக்கு எங்கிருந்து தெம்பு வரும்
எந்த நேரமும் கத்திக்கிட்டே இருக்குதுன்னா ஏன் கத்தாது வெளியில இந்த உன் கதையை சொல்லிப்பாறேன் காரி உன் மூஞ்சிலேயே துப்புவாங்க தேவைதானா இதுஉனக்கு

உங்க அம்மா வீட்டுக்கு பெருமை சேர்க்க நான் தானா கெடைச்சேன் உனக்கு

புறப்படு ஊருக்கு போ உங்க அப்பா அம்மாகிட்ட லீவுல வந்து பேசிக்கிறேன் உன்னால மூனு குடும்பம் பிரிஞ்சி போச்சிடி அந்த பாவமும் விடுற சாபமும் நிம்மதியா வாழ வச்சிடுமா ம்.....நடையகட்டு நிக்காதே

வண்டியில அவளை உக்கார வைத்துவிட்டு தன் மனைவியை காரணம் காட்டி அவர்களுடைய மனைவிமார்களை சண்டையிட்டு துறத்திய நண்பர்களை வீட்டுக்கு அழைத்து விசயத்தை விபரமாக சொன்னான்

அவர்களுடைய மனைவிமார்கள் அவரவர் தகுதிக்கேற்ப நகைகளை வாங்கிக்கொண்டே வந்தார்கள்

நண்பர்கள் வெட்கத்தோடு தலைகுனியலானார்கள் அந்த நகைகளை வாங்கித்தர என்ன பாடுபட்டார்களோ தெரியாது என்று தங்கள் மனைவிமார்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதோடு அந்த நகைகளை திருப்பி கொடுத்துவிட கேட்டுக்கொண்டார்கள் எங்கெங்கே கடன் பட்டார்களோ அவர்கள் நிம்மதியை கெடுத்துவிட்டோம் மறுபடியும் வண்டியேற்றி கொடுத்துவிட்டு அவர்கள் கடனை அடைத்துவிட்டு வந்து நிம்மதியாக வாழ்கிறார்கள்

எழுதியவர் : Abraham Vailankanni (6-Jul-17, 9:27 am)
பார்வை : 491

மேலே