மௌன மொழி

உன் மௌனம் மட்டும் -என்னை
நிலை குலைய வைக்கிறது...
நீ வாய் திறந்து பேசியிருந்தால் கூட என் மனம்
தடு மாறியிருக்க வாய்ப்பில்லை....
உன் காந்த விழி வீச்சும்...
உன் மௌன மொழியும்...
உன்மீதான என் காதலை ஆழப்படுத்துகிறது
நீ சாதிக்காததை உன் மௌன மொழி
என்னிடமிருந்து சாதித்தது கொள்(ல் )கிறதடி
-NP பிரதாப்-