என் காதல் உனக்கு புரிகிறதா
தேனின் தித்திப்பை உன் இதழ்கள் மிஞ்சுகிறதா !
வாளின் கூர்மையை உன் விழிகள் மிஞ்சுகிறதா !
உன் கோபத்தின் சூடு நெருப்பை மிஞ்சுகிறதா !
உன் தேகத்தின் மென்மையை பூக்கள் மிஞ்சுகிறதா !
உன் தேகத்தின் நிறத்தை ரோஜா மிஞ்சுகிறதா !
"உன் அழகு முழுவதையும் என் கவிதைகள் மிஞ்சுகிறதா !
"என் காதல் உனக்கு புரிகிறதா ?

