கல்லறையில் ஓர் காதல் பயணம்_பாகம்3
அச்சம் தலைக்கேற பயணம் தொடர்கிறது.துவண்டு போன உணர்வுகளுடன் சாலையை அடைந்தவன் பதற்றத்திடம் பறி போனவனாய் காணப் பட்டான். ஒரு வழியாக பிழைத்தால் போதும் எனும் எண்ணத்துடன் கல்லூரியை வந்து சேர்ந்தான். வாயில் திறந்திருந்தால் உடனே உள்ளே பாய்ந்தான். இருட்டும் அமைதியும் சூறையாடப் பட்ட மனதை மேலும் துளைத்துக் கொண்டிருக்க திரும்பி பாராமல் விடுதியறை நோக்கி ஓடினான். அறையை அடைந்தவன் சட்டை பையில் கை விட்டு சாவியை தேடி எடுத்தான். பூட்டை திறக்கும் தருவாயில் கை பதற்றம் கண்டு சாவி கீழே விழுந்தது. குனிந்து எடுத்தவனால் கைகளின் நடுக்கத்தை கட்டுப் படுத்த இயலவில்லை. எப்படியோ அறைகள் திறக்கப்பட்டு உள்ளே சென்றவன் கதவினை உட்புறமாய் தாளிட்டுக் கொண்டான் . கட்டிலில் அமர்ந்திருந்த அவனுக்கு கண்ணிமைக்க கூட துணிவு இல்லை. அனைத்தும் புரியா புதிராகவே இருக்க ஏதும் விளங்காமல் கண்கள் மிரண்டு கொண்டிருந்த தருணம் கதவை தட்டும் ஒலி காதை பிளக்க திறக்கலாம வேண்டாமா ??? என்று சிந்தித்து கொண்டிருக்கும் தருவாயில் சத்தம் அதிகமானது. மிரண்டு போனவனிடம் செத்தே போயிவிடுவோமா?? என்ற எண்ணம் மேலோங்கியது. மனதை பலப் படுத்தி கொண்டு சட்டென கதவினை திறந்தான். விளக்கு அணைக்கப் பட்டிருந்தது யாரும் தென்படவில்லை. கலையா புதிருடன் அச்சம் சூழ்ந்துவிட செய்வதறியாமல் திகைக்கிறான். உடன் இருப்பது யாரென்ற கேள்வி இடைவிடாது எழுந்து கொண்டிருக்க மனதை சாந்தப்படுத்த இயலவில்லை.உணர்வுகளின் வலிமை அழகானது மட்டுமின்றி அச்சமுடையதும் கூட என அத்தருணம் தான் உணர்கிறான்.மனதை வருடும் அச்சம் தெளிந்து சிந்தனைகள் பூக்கத் தொடங்கின.தன் மேல் அக்கறை கொண்ட ஒரு உள்ளம் ஏக்கத்தில் தவிப்பதை அறியவா போகிறான் அவன். அன்பின் ஆழம் என்பது அவரவர் கையில் தான். அன்பின் வெளிப்பாடு பயமாய் கட்சிப் படுத்தப் பட பித்தம் தான் பிடித்து விட்டது போல. சிந்தனைகளில் சிக்குண்டவன் கண் இமைத்தான் களைப்பு மிக. பிஞ்சு விரல்கள் தலை கோதும் உணர்வு இருப்பினும் அதிகம் ஆராய மனமில்லாது மயக்கம் கொண்டான். விடியாமல் விடிந்து விட்ட பொழுதை எண்ணி விழித்தவன். மர்மம் நீங்காதவனாய் நடந்தவற்றை நினைத்துக் கொண்டிக்க தாளிட்ட அறை தட்ட படுகிறது. இந்த முறை துளியும் பயமில்லை பாய்ந்து சென்றவன் கையில் சிக்கி உடையாமல் தப்பித்தது கதவு.
_தொடரும் .