காதல்

பேருந்துக் காதல்
*****************
மாயச் சிரிப்புல
மயங்கிக் கிடக்கையில
ஒரு தடவ "நீ" பார்க்கையில
ஓராயிரம் இன்பக் காற்று வீசுதம்மா!

விழிகளும் பேசல
இதழ்களும் பேசல
ஒரு நொடிஇதயமும் நின்னுப் போச்சி
உன் ஓரக்கண்ணுப் பார்வையில!

உதடுகள் பிதுங்கவே
புருவமும் சுருங்கவே
உன் கண்ணாடிப் பார்வையிலே
உன் கண்ணுக்குள்ள என் முகமே!

கருப்பு ஓடைக் கூந்தலிலே
வண்ணப் பூக்கள் வளர்த்தவளே
பூக்கள் வாசம் அறிகில் அழைக்க!
வாசம் வீசும் கருப்புத் தண்ணி
முகத்தில் பட்டுத் தெறிச்சிப் போச்சி!

பேருந்தும் நிர்க்கவே!
நீ என்னைக் கடக்கவே!
இதயம் துடிக்க !

உன் வாசம் வீசும்!
இரவுகளும் பேசும்!
நாளை மீண்டும் தொடர
விடியலுக்காக!

பேருந்து நிருத்தத்திலே
நிக்குதம்மா என் மனசு ~மீண்டும்
தொடரவே என் காதல் பயணப் பேருந்து
நீ வரும் விடியலுக்காக!

~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் (13-Jul-17, 12:40 am)
Tanglish : kaadhal
பார்வை : 230

மேலே