தேசத்தின் அவலம்

!!!தேசத்தின் அவலம்!!!

வெள்ளையனின் விடுதலையால்,
அடிமையாகிப் போனோமே,
தலைவர் என்ற போர்வையிலே,
தரம்கெட்ட மிருகம் எல்லாம்
ஆட்சியாளர் ஆனரே!

உடுத்தும் உடையைக் கொண்டு
பிரித்தார்கள், ஊனமுற்ற மூளையர்கள்.
நிறங்கள் பார்த்து பணியமர்த்த,
நீதியற்று நின்றோமே!

நீதி கேட்டு போனோரை,
சாதி சொல்லி பிரித்தார்கள்.
சாதிக்கொரு மொழியைத்தந்து,
மொழியைக் கொண்டு போர் தொடுத்தார்கள்!

போரைக்கொண்டு தேசத்தினை,
அருதியிட்டு பிரித்தார்கள்.
அருதிக்கொண்டு நீரைக்கூட,
தர மறுத்தார்கள்!

நீரும் இல்லை, நிலமும் இல்லை,
சோறு கேட்டு நின்றோரை,
பிச்சைப்போட்டு(இலவசம்) கொன்றார்கள்!

சடலம் கூட அரசியலாகி
அகதியாகி போனோமே.
வீறு கொண்டு பெற்ற விடுதலையை,
கூறு போட்டு விற்றார்கள்!

அடிமையாகி போனோமே,
அடிமையாகி போனோமே,
சில்லரைக்காய் வாக்கை விற்று
இன்று அடிமையாகிப் போனோமே!!!

உங்கள்
தௌபீஃக்

எழுதியவர் : தௌபீஃக் (13-Jul-17, 7:26 am)
சேர்த்தது : ஷிபாதௌபீஃக்
பார்வை : 384

மேலே