காதலனுக்கு

--------------------------காதலனுக்கு------------------------------

காதலனே காதலனே முன்கோபக் காதலனே
உன் முன்னால் எனை ஊமையாக்கும் காதலனே
மிரட்டும் கண் கொண்டு காதல் பார்வை பாரடா என் காதலனே


உள்ளிருக்கும் காதலை ஒரு நாளேனும் சொல்லி விடு-என்
உயிர் போகும் முன்னால்


நீ சொல்லாமல் மறைக்கும் திமிர்கூட என் காதல் கூட்டும்
திமிர்பிடித்த காதலா - என்
திமிரெல்லாம் உனக்கே


சொற்பமே என் காதல் உனக்கு
சொர்க்கமே நீ வந்தால் எனக்கு


அற்பமாய் நடந்தாலும் உனை ரசிப்பேன்
சிற்பமாய் நின்றாலும் உனை ரசிப்பேன்


அனைவரிடம் அன்பு காட்டி
என்னிடம் மட்டும் எரியும் நீ
அது காட்டும் உன் காதல்
நீ அறியாய் நான் அறிவேன்


நீ இனிக்க பேசி ஒரு நாள் இல்லை
இதயம் கிழிக்கா நாள்களே இல்லை
இருந்தாலும் அது கூட என் காதல் கூட்டும்


வெறுத்தாலும் விலகாமல் - விக்கிரம
வேதாளமாய் விடாது முதுகில் ஏறி
என் காதல் உரைப்பேன் - உன்
மங்கிய மூளைக்கு உரைக்கும் வரை...


#கரிசல்மகன்

எழுதியவர் : சிவக்குமார்-"கரிசல்மகன்" (13-Jul-17, 3:47 pm)
சேர்த்தது : சிவக்குமார்
Tanglish : kaathalanukku
பார்வை : 654

மேலே