உயிரும் நீதான் உலகமும் நீதான்
உனக்காக காத்திருக்கிறேன்
உன்னை உயிராக பார்த்திருக்கிறேன் !
எங்கு நீ வசித்தாலும் அங்கு வந்து தேடுகிறேன் !
எவ்விடம் நீ வலம்வந்தாலும் அவ்விடத்தில் உன்னை தெடிக் கொண்டிருக்கிறேன் !
தூவும் மழை துளி தரையில் பட்டு துளைவது போல்
தொடர்ந்த உன்னோடு என் காதல் பயணம் உன் பிரிவால் துவண்டு நிற்க !
பித்தனனாக பிதற்றுகிறேன்
வீதியெங்கும் உன்னைப் போல் உருவமிருக்க
எனக்கு விடையொன்று சொல்லடி கண்ணே .
படைப்பு
ravisrm