நினைவுகளின் வலிகள் - சகி

பறவைகளின் கூட்டத்தில்
ஜோடிப்புறாவாக நாம்.....

தனித்தனியே பிரிவோம்
என்றெண்ணவில்லை ......

உன் பிரிவை எண்ணி மனதில்
காயங்களுடன் நான்......

முகத்தில் பொய்யான புன்னகையுடன்
தோழிகளுடன் நான்
கோலமிட்டுக்கொண்டிருந்தேன்

அருகிலமர்ந்து நீ
பார்த்த பார்வையின்
மொழிகளை நானறியாமலில்லை ......

உன் விழிகள் எனக்கு
சொல்லிய காதலை நான்
உணராமலில்லை .....

நீ புள்ளிவைத்துக்
கோலமிடுகிறாயாடி பெண்ணே

புள்ளிகளை இணைத்தால்
தானே அது கோலம் .......

நம் காதல்
புள்ளிகலுடனே நின்று
முற்றுப்பெற்றது .......

முழுமையாகவில்லை ......

நீ போடும் கோலமாது
உன் விரல்களால்
முக்தி பெறட்டும் என்கிறாய் .....

மன்னித்துவிடடி என்
ஆருயிர் காதலியே
என உன் பார்வையின்
மொழிகளை உணர்ந்தேன் ......

பாதியிலே விட்டு சென்றாய் .....

என்னையும் காதலையும்
சொல்லாமலே ......

என் கோலத்தையும்
விட்டுச்சென்றாய் பாதியிலே
ரசிக்காமலே......

என்னில் வலிகள்
மட்டும் நிரந்திரம்......

எழுதியவர் : சகி (12-Jul-17, 1:41 pm)
பார்வை : 2118

மேலே