சொற்களின் வலிகள் - சகி
வலிகளை மட்டுமே
கிறுக்கிகொண்டியிருக்கிறது
என் விரல்கள் .....
சந்தேகவார்த்தைகளால்
இதயம் அனுபவிக்கும்
வலிகள் கொஞ்சமல்ல .....
துடிக்குமிதயத்தின்
துடிப்பு நின்றுவிட்டால்
கூட சுகமே ......
உணராத இதயத்தின்
அன்பு நிரந்திரம்மில்லை .....
உண்மையான அன்பும்
உள்ளத்தில் இல்லை .....
தனிமையே நிரந்திரமாக
என் துணையாக இருந்த
தருணங்களில் கூட
இவ்வளவு வலியில்லை......
என்றுமே என்
வாழ்க்கை கேள்விக்குறியே ....