ஒரு கோப்பை தேநீரும் சிகரெட்டும் இளையராஜாவும்

ஒரு கோப்பை தேநீரும் சிகரெட்டும் இளையராஜாவும்

திடீரென ஒரு மழைக்கால சாய்ங்காலத்தில்
தான் மழை வந்தது...!!!
அப்பொழுது தான் ஒரு இன்டெர்வியூ முடித்து
நடந்து வருகிறேன்....

இன்டெர்வியூ???
வழக்கம் போல கோவிந்தா...!!!

மழைக்கு அஞ்சி எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்...
முட்டாள்கள்... ரசிக்க தெரியாத
முட்டாள்கள்...!!!
ரசனை இல்லா ஐந்தறிவுகள்..!!

என்ன ஐந்தறிவுகள் என்றா சொன்னேன்...?
ஆம் அதில் என்ன தவறு???
ஐந்தறிவுகளும் இப்படி தானே மழையைக்கண்டு
ஓடி ஒழிகிறது....!!!

எருமை மழையைக்கண்டு ஓடி ஒழிவதில்லை
என்றா சொல்ல வருகிறீர்கள்...???
சரி நீங்கள் எருமைகளாய் இருந்து விட்டு
போங்கள்..!!

நான் மழையை ரசிக்கிறேன் அனுபவிக்கிறேன்...
நனைகிறேன்..
மழை என்னை நனைக்கிறது..
பையில் வைத்திருந்த பணம்..
நான் படித்து கிழித்த என் சான்றிதழ்கள்...
சான்றிதழ்கள்...??
நனைந்து விட்டு போகிறது...!!!
அது எதற்கு ஒன்றுக்கும் ப்ரோஜனம் இல்லாதது..

மழைக்கு ஒதுங்கிக்கொண்டவர்கள் என்னை
வித்தியாசமாக பார்க்கிறார்கள்...
பார்த்து விட்டு போகட்டும்...
மழை ஒரு ஆனந்தம்..
நனைவது பேரானந்தம்...

முழுக்க நனைந்து விட்டேன்
இனி முக்காடு அவசியம் அல்லவா..?
முக்காடு எதற்கு என்று கேட்பீர்களானால்
நீங்கள் பழைய ஆள்...!!

சரவணன் ஜவுளி கரையோரம் கும்பலாய் மழைக்கு
ஒதுங்கி இருந்தார்கள்...
நானும் ஒரு ஓரத்தில் ஒதுங்கிக்கொண்டேன்...


இப்போது ஒரு சிகரெட் பிடித்தால் எப்படி இருக்கும்...??
தாமதிக்காமல் ஜவுளிக்கடையை ஒட்டி இருந்த
டீக்கடையுல் ஒரு சிகரெட் ஒரு
டீ வாங்கிக்கொண்டேன்,,,,

ஒரு டீ...
ஒரு சிகரெட்...
ஹெவன்...!!!


அந்தி மழை பொழிகிறது...
ஒவ்வொரு துளியிலும் உன்
முகம் தெரிகிறது...
எப் எம்-ல் இளையராஜா....!!!

ஸ்லொவ்மோஷனஷனில் அவள் முகம் தெரிகிறது...!!
அவள்...??

காவியா...!!

காவியா...???

என் காதலி...
சாரி முன்னாள் காதலி...
இந்நாள் மனைவி...
எனக்கல்ல எவனோ ஒருவனுக்கு...!!


உயிர் உள்ள வரை உன்னை பிரிய மாட்டேன்...
பிரிந்த நொடி வள மாட்டேன் என்று தப்பாக,,
வழக்கமான
காதலிகளை போல
எனக்கும் கவிதை எழுதியவள் தான்
ஆனால் நான் வழக்கமான
காதலன் அல்லவே..

எப்ப பாரு எதையாவது யோசிக்கிற
என்ன கண்டுக்கவே இல்ல...
அவனவன் தன்னோட காதலியை எப்படி எப்படியெல்லாமோ
பாத்துக்குறான் நீயும் இருக்க பாரு...
சே சரியான கிறுக்குடா நீ...

சிரிப்பு வருகிறது..

கொஞ்சம் சத்தமாகவே..
அருகில் இருப்பவர் வித்தியாசமாக பார்க்கிறார்கள்
பார்த்து விட்டு போகட்டும்...
நான் கிறுக்கு தான்,,,,

மழை நின்றிருந்தது..
கோப்பை காலியாக்கிருந்தது...
சிகரெட் தீர்ந்து விட்டது...
நடக்க துவங்குகிறேன்...

எப் எம்-ல் இளையராஜா

வானம் எனக்கொரு போதி மரம்...
நாளும் புது புது செய்தி தரும்...
ஒருநாள் உலகம் நீதி பெறும்..
திருநாள் நிகழும் தேதி வரும்..
கேள்விகளால் வேள்விகளை நான்
செய்வேன்...

எழுதியவர்
- அருள் .ஜெ


  • எழுதியவர் : அருள் ஜெ
  • நாள் : 13-Jul-17, 7:30 pm
  • சேர்த்தது : அருள் ஜெ
  • பார்வை : 366
Close (X)

0 (0)
  

மேலே