குழப்பும் உலகம்

இன்றைய நடைமுறையில் பிறந்த குழந்தைக்கு தாலாட்டுப்பாடி தூங்க வைக்கும் அம்மா யாராவது இருக்காங்களா?
தன் மகனை/மகளை தன் தோள்களில் சுமந்து ஊர் திருவிழாகளில் கலந்து கொள்ளும் அப்பா யாராவது இருங்காங்களா??

பணமே வாழ்க்கையாகிவிட்ட இவ்வுலகில் அதற்கெல்லாம் எங்கே நேரமிருக்கப் போகிறது??

தாயின் பாசம் தலையைக் காணும் வரை...
தந்தையின் பாசமென்பது என்றும் ஒரு கேள்விக்குறி தான்...

உண்மையாய் நேசிப்பார் யாருமில்லை...
உண்மையாய் வாழ்பவர் எவருமில்லை விந்தையான இவ்வுலகிலே...

விளம்பரத்திற்காக மொழி வெறி...
ஆடம்பரத்திற்காக பண வெறி...
இப்படியே ஏகப்பட்ட வெறிகளுக்கு இடையிலே சுழல்கிறது மனிதர்களின் வாழ்க்கையென்னும் சுயநலப் பம்பரம்...

ஓராயிரம் உணர்வுகள் உள்ளங்களிலே போங்கி வர அத்தனையும் பரிசாக வந்தவை காயங்களேயன்றி வேறெதுமில்லை பொக்கிஷமென்றும் புதையலென்றும் போற்றிப் பாதுகாக்க...

தாய்க்கு வேதனை தந்து பிறந்தது தான் நம் தவறா?
தந்தையின் உழைப்பில் வளர்ந்தது தான் நம் தவறா??

விலை கூறி விற்கிறார்கள் உணர்ச்சியற்ற பொருடகளாய்..

லாபம் கருதி ஆற்றப்படும் கடமையைப் போல நாம் கற்கும் கல்வியால் எதையும் நாம் ஆக்கவில்லை..
இருப்பதை அழித்துக் கொண்டிருக்கிறோம்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (15-Jul-17, 5:52 pm)
பார்வை : 444

மேலே