இன்றைய தாலாட்டு

துக்கமெல்லாம் மனதை நிறைக்க ;
தூக்கம் கூட தூர போச்சே !
துள்ளி திரிந்த காளையரும் ;
துயரத்திலே மூழ்கியதே !

அதிகாரத்திலே இருப்பவனோ ;
அன்னகையாய் போனதினால் !
அனுதினமும் புது - சட்டம் போட்டு ;
அலைக்கழிக்கும் மானிடரே !

அமைதிக்கும் வழியில்லை !
அழுவதற்கும் கண்ணீர் இல்லை !
தாகத்துக்கு தண்ணீர் இல்லை !
தட்டி கேட்க ஆளில்லை !

தவிக்கும் மக்கள் மனதிற்கு ;
தாலாட்டும் கேட்குதம்மா !
வீரமான தாலாட்டே ;
வீதிவரை வேண்டுமம்மா !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (16-Jul-17, 9:50 am)
பார்வை : 124

மேலே