நானும் பனியும்

நடு இரவில் நானும் பனிமலரும்!
☁☁☁☁☁☁☁☁☁☁☁

மார்கழிக் குளிர் மேனியை ஆட்கொள்ள
வீதிகளில் மங்கிய நிலவு ஒளி வீச
மரங்கள் உறங்க! பறவையும் உறங்க!
வீதிகள் எங்கும் பனிமலர்ப் படர்ந்துக் கால்கள்
பதிக்கும் இடமெல்லாம் பாத வெடிப்புக்கு
இதம்! இதம்!

சொட்டியத் தண்ணீரும் பனிமலராய்க் கைகள்
தொட்டுக் கண்ணாடியாய் சிதறியப் பூக்களாய்!
கரையாதக் காக்கையும்! உருகாதப் பனியும்!
போர்வையின் உள்ளே தேகமும் இல்லை வீதியில் நடக்கவே! பருவத்தைப் புசிக்கவே!

கால்ச் சட்டையுடன் பனிமலர் மார்பினில் தவழ உடல் உறையவும் இல்லை!ஆசைக் குறையவும் இல்லை!
வெண்மைப் பூக்கள் வீதியெங்கும் படர்ந்துக் கிடக்க நிலவு ஒளியிலே! பனியும் நிலவாக!

பனிக் குளு படர்ந்துக் கிடக்க அள்ளி அருந்த
கண்கள் புசித்துக் குளிர்ந்து விட!
நீண்ட........வீதியில்! நீண்ட........தூரம்!
நீண்டச் சோலையில் பனிமலர்கள்!

முகிலின் மேனி உதிர்த்து மொட்டுக்கள் விரிந்த
மலர்ச் சோலையில்! நான் பருவத்தைப் புசிக்கிறேன்! குளிர்க் காலப் பருவத்தை ரசிக்கிறேன்!

இரவில் இயற்கை உறங்க! நான் உறங்காமல் !
பனி மலர் மீதுப் பாதம் பதித்து தேகம் குளிர!

~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் (16-Jul-17, 12:39 am)
Tanglish : naanum panium
பார்வை : 162

மேலே