வான் ஆற்றாமை
!!!வான் ஆற்றாமை!!!
இது கதிரவனின் குமுறல்🌞🌞🌞
ஏய் நிலவே,
என் துணைத்தேடி நான் பார்சுற்ற,
நீ மட்டும் பிறப்போடு உன்
துணையை(பூமி) கொண்டாயட என் தோழா!
ஆழிக்கூட நேர்நின்று மலை விழுங்க,
நீ மட்டும் (5•) வளைந்து கொண்டு உன்னவளை
சூழல்கிறாயட என் தோழா!
சூற்றோரின் வார்த்தையால் நான் அனல் குக்க,
நீ மட்டும் பூவி நோக்கி
சீதளம் கொள்கிறாயட என் தோழா!
சினம் கொண்டு நான் சிவக்க,
நீ மட்டும் இருள் தளர்த்தி
வெளிர்கிறாயட என் தோழா!
என்ஈர்ப்பு விசையினிலே
உரவுநீரோடு உறவாட,
நீ மட்டும் ஈர்ப்பு விசையற்று
அகலிடம் புணர்கிறாயட என் தோழா!
கார்மேகங்களின் தடையால் நான் குருடாக,
நீ மட்டும் அனுதினமும்
புவிதரிசனம் கொள்கிறாயட என் தோழா!
உழைப்பின் சோர்வில்,
இருள் சூழ அவள்மடியில்
குடில் கொள்கிறாயட என் தோழா!
ஏனோ புலமைவாதிகள் மட்டும்
உன் மண்மதலீலையை மறந்து
பெண்மைக் கொண்டு கவிபுணர்கிறர்கள்!!
என் மழலை மறந்து கவி கொண்டு
என்னை ககுவாய் புனைகிறார்கள்,
ஐயோ நான் பாவம்!!!!
ஐயோ நான் பாவம்!!!!
உங்கள்
தௌபீஃக்