மாங்கல்யம் தந்துனானேனா

மாங்கல்யம் தந்துனானேனா

மனைவி -
மஞ்சள் நாணை
மந்திரித்து கட்டி ...
மன்னவன்
பிதற்றினாலும்
பிசகினாலும்
புன்னகையை மட்டுமே
பரிசாய் அளிப்பாள்
மாங்கல்யத்தின்
மகிமை போற்றி ...

கணவன் -
செக்கில் பூட்டிய
காளை போல்
தன்னவள்
விலக்கினாலும்
விலகினாலும்
விழுந்து எழுவான்
மனைவியின்
மடியில் மட்டுமே ...


Close (X)

0 (0)
  

மேலே