மனமே நீ கண்ணுறங்கு

(காயங்களால் சூழப்பட்ட இதயங்களுக்கு ஆறுதல் அளிக்கும் நோக்கத்தில் என் பேனா சிந்திய முத்துகளை உங்கள் முன் தொடுக்கிறேன்)


ஆராரோ பாட யாருமில்லாது, பொழுதெல்லாம்
கதறி அழுகின்ற ஊமை உள்ளத்திற்கு என்
தங்க வரிகளால் தாலாலோ பாடுகிறேன்
மனமே நீ கண்ணுறங்கு....!

பயப்படாதே!காயங்கள் மட்டுமே அறிந்த உன்
இதயத்தை பிழிந்தெடுத்து குருதிகுடிக்கும்
பொய்யுருவில் வருகின்ற சில
அகோரிகளின் எச்சம் நானல்ல...!

சில நூறு அறுவை சிகிச்சை
செய்த இதயத்திற்கு வார்த்தைகளால்
தையலிட முற்படுகிறேன்...!


நீ உலகத்தின் விசித்திரம் -நீ
உண்டாக்கிய கண்ணீர் வெள்ளத்தில்
நீயே அடித்துச் செல்லப்படுகிறாய்....!


உன் உண்மை கண்ணீரையும் பொய்
சிரிப்பையும் இதுவரையில் உணர்ந்தோர்
ஒன்றோ இரண்டோ இருக்கலாம்..!

பூதங்கள் தேவையில்லை பயமுறுத்த காரணம்
இது ப்ருடஸ்கள் நிறைந்த உலகமடா..!

ஒரு நிமிடம் என் எழுத்தாணி
உனக்காக கண்ணீர் சிந்துகிறது...!

கவலை காட்டில் தொலைந்து போகாதே!
எழு ,கண்ணீர் துடை,உற்சாகம் கொள்..!
சோகம் மறந்து லட்சியம் கைகொள்...!


இருட்டு உலகத்தின் குருட்டு விழிகள்
உன் உணர்வுகளை
நெகிழிப் பந்துகளாக்கினாலென்ன,நீ
நெகிழா நெஞ்சு கொள்..!


நிராகரிப்புகளுக்காக நீ
நிர்மூலமாகலாமா?
உந்தியேலும் ஆற்றல் கொள்..!

இடைவெளி இல்லா இரட்டை பிரசவம்
போல வேதனையும்,தோல்விகளும்
உனக்கு கண்ணாமூச்சி காட்டினாலென்னா,
மனமே நீ துயரமறந்து கண்ணுறங்கு..!

மண்தோடும் மா மரக்கிளைகள்
கலங்குவதில்லை,மதி கொண்ட
மானுட மனமே,அமைதியாய்
நீயும் கண்ணுறங்கு....!

நினைத்து எல்லாம் நிஜமாகும்
இனி நித்தமும் நமக்கொரு வரமாகும்
நம்பிக்கை பூக்கள் உதிரா வரை
நாளைகள் எல்லாம் நமதாகும்...!

நடப்பவை எல்லாம் இனிதாகும் மனமே
நலமாய் நீ கண்ணுறங்கு,
மனமே நீ கண்ணுறங்கு....!


கோவை.சரவண பிரகாஷ்.

எழுதியவர் : (17-Jul-17, 9:46 pm)
பார்வை : 192

மேலே